ஜம்மு காஷ்மீரில் மன நலம் பாதித்த 5 மைனர்பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் அரசு சாரா தொண்டு நிறுவன இயக்குனர் மற்று
ம் பாதுகாவலர் இருவர் கைது செய்ப்ப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மன நலம் பாதித்தவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது.
சமீப காலமாக நாட்டில் கற்பழிப்பு குற்றம் பெருகிய வண்ணமே உள்ளது. மருத்துவ மாணவி கற்பழிப்பு, மும்பை பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு, மும்பை மற்றும் டில்லி உள்ளிட்ட நகரங்களில் இது போன்ற குற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மன நலம் பாதித்த பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் வெளியே பரவியது :
ஜம்மு மாவட்டம் ஷன்னிரமா என்ற பகுதியில் அரசு சாரா நிறுவனம் மனநல காப்பகம் நடத்தி வருகிறது. இங்கு 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு உள்ள டைரக்டர் சில பெண்களிடம் தவறான முறையில் நடந்துள்ளார் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் மூலம் தகவல் வெளியே பரவியது. இதனையடுத்து போலீசில் அளித்த புகாரின்படி காப்பகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இயக்குனர் இந்த குற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இயக்குனர் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த பாதுகாவலரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் சிலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
300 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு : ஜம்மு டிவிஷனல் கமிஷனர் இது குறித்து விசாரிக்க டாக்டர்கள் மற்றும் போலீசார் கொண்ட குழுவை நியமித்தார். இந்த குழு விசாரணையில் இந்த பெண் குழந்தைகளிடம் சிலர் வழக்கமாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சில ஊழியர்களும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து வருகிறது.
மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடூரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
காஷ்மீரை பொறுத்தவரை கடந்த 2012 ம் ஆண்டில் 300 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறதுDINAVIDIYAL!