HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 September 2013

உத்தரகாண்ட் வெள்ளம்: கேதார்நாத் பகுதியில் மேலும் 64 உடல்கள் கண்டுபிடிப்பு

டேராடூன், செப். 5-

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் பலியாகினர். குறிப்பாக பத்ரிநாத், கேதார்நாத் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அவ்வப்போது மழை பெய்து வருவதால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. 

தற்போது பல்வேறு இடங்களில் மழை குறைந்து, சில நாட்களாக சீரான வானிலை நிலவுவதால் மீட்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும், ராம்பதா-கேதார்நாத் கோவிலுக்கு இடைப்பட்ட பகுதியில் 64 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் உடனடியாக தகனம் செய்யப்பட்டன. 

ஜங்கிள்சாட்டி, ராம்படா, கவுரிகான் மற்றும் பீம்பாலி பகுதியில் மேலும் உடல்கள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, செப்டம்பர் 11-ம்தேதி கேதார்நாத் ஆலயத்தில் வழிபாடு தொடங்க உள்ளதால், மீட்பு மற்றும் உடல்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உத்தரகாசியில் 35 மி.மீ மழை பதிவாகி உள்ளது. முன்சியாரி 28 மிமீ மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பல்வேறு பகுதிகளில் மழை பெய்யலாம் என தெரிகிறது.-DINAVIDIYAL!