பாகிஸ்தானின் பெஷாவர் பகுதி தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெஷாவர் அருகே மட்டானி என்னுமிடத்தில் சென்ற பேருந்து மற்றும் இரு வாகனங்களை குறிவைத்து ஆயுதம் ஏந்தியவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்களில் சென்ற பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
அப்போது துப்பாக்கி சத்தத்தை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை.
கடந்த 10 வருடங்களில் தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
பெஷாவர் பகுதியிலிருந்து செயல்படும் தீவிரவாதிகள் தான் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.-DINAVIDIYAL!