HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 7 September 2013

37 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் புதைந்த ஜுராசிக் பார்க்: வெனிசுலாவில் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா எண்ணை வளம் மிகுந்த நாடு. தலை நகர் கராகஸ் பகுதியில் கற்கால ஆராய்ச்சி மேற்கொள்ளும் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிக்காக
பூமியை தோண்டினார்கள்.
அப்போது அங்கு பல ராட்சத வடிவிலான மிருகங்களின் எலும்பு கூடுகள் புதைந்து கிடந்தன. அவை ஒரு பஸ் அளவுக்கு மேல் பெரிதான முதலை, பெரிய பற்களை கொண்ட புலி உள்ளிட்ட மிருகங்களின் எலும்பு கூடுகளாகும்.
அவற்றை வெனிசுலா அறிவியல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இவை 37 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம்.
இப்பகுதி வனப்பகுதியாக இருந்து இருக்கலாம். இங்கு ராட்சத வடிவிலான விலங்குகள் வாழ்ந்திருக்கலாம். அவை இயற்கை மாற்றத்தின் காரணமாக பேரழிவுக்கு சென்று இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்-DINAVIDIYAL!