HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 7 September 2013

அமெரிக்க தேர்தலில் உதவியவருக்கு முக்கிய பதவி: ஒபாமா அறிவிப்பு

அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய பத்து பதவிகளுக்கான நியமனங்களை நேற்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்தார். அதில் தனது மறுதேர்தல் செலவிற்கு பெரும் நிதி திரட்டிக் கொடுத்த அசிதா ராஜி என்ற பெண்மணிக்கும் முக்கிய பதவியினை அளித்துள்ளார். 

வெள்ளை மாளிகையின் நிதி உதவியினைப் பெறும் நபர்களைத் தேர்வு செய்யும் அதிபர் கமிஷனின் உறுப்பினர்களில் ஒருவராக இவரை நியமித்துள்ளார். அசிதா ராஜி சான் பிரான்சிஸ்கோவில் வாழ்ந்துவரும் கொடையாளியாக அறியப்படுபவர். இவர் பாரக் ஒபாமா கடந்த 2011-12 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டபோது, அமெரிக்க இந்தியர்களிடமிருந்து 3 மில்லியன் டாலர்களுக்கு மேல் நன்கொடையாகத் திரட்டிக் கொடுத்துள்ளார். அப்போது அதிபர் ஒபாமாவின் தேசிய நிதி துணைத் தலைவராக இவர் பணி புரிந்தார்.

பெர்னார்ட் கல்லூரியின் டிரஸ்டி, அதே கல்லூரியின் தலைமைப்பண்பு படிப்பிற்கான அதேனா லீடர்ஷிப் கவுன்சிலின் துணைத் தலைவர். பெர்னார்ட் வளர்ச்சிக் குழுவின் இணைத் தலைவர் போன்ற பல பதவிகளை இவர் வகிக்கின்றார். இதுமட்டுமின்றி, நகரிய நிர்வாகக் குழு, முதலீட்டுக் குழு மற்றும் திட்டமிடுதல் ஆலோசனைக் குழு போன்றவற்றிலும் அசிதா ராஜி உறுப்பினராகப் பணியாற்றி வருகின்றார். 
மேலும் கொலம்பியா பிசினஸ் ஸ்கூல் சமூக நிறுவனத் திட்டம் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இவர் இருக்கின்றார். இத்தகைய திறமையானவர்கள் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து அமெரிக்க நாட்டிற்குப் பணியாற்ற ஒப்புக்கொண்டது குறித்து தான் பெருமையடைவதாகக் கூறிய ஒபாமா, வரவிருக்கும் காலங்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை தான் எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.-DINAVIDIYAL!