வட அமெரிக்கா கண்டத்தில் மெக்சிகோ அருகே கவுதமாலா மற்றும் எல் சால்வேடர் ஆகிய குட்டி நாடுகள் உள்னன. இவை பசிபிக் கடலில் அமைந்துள்ளன. நேற்று இங்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தெற்கு கவுதமாலா மற்றும் எல்சால் வேடரில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள்
குலுங்கின.
இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். இங்கு 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கவுதமாலா கடற்கரை மற்றும் மெக்சிகோவை மையமாக கொண்டு பஜாபிதா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 67.7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
-DINAVIDIYAL!