இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவனான யாசின் பத்கல் கடந்த மாதம் 29–ந் தேதி பீகாரில் உள்ள நேபாள எல்லையில்
பிடிபட்டான். அவனுடன் அசதுல்லா அக்தர் என்ற தீவிரவாதியும் சிக்கினான்.
பிடிபட்டான். அவனுடன் அசதுல்லா அக்தர் என்ற தீவிரவாதியும் சிக்கினான்.
யாசின், அக்தர் இருவரையும் டெல்லி புறநகரில் உள்ள துணை நிலை ராணுவ முகாமில் வைத்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் இதுவரை இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புக்கான சதி திட்டங்கள் பற்றி கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே தீவிரவாதி அசதுல்லா அக்தர் பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. 26 வயதே ஆகும் இவன் யாசினின் வலது கரமாக திகழ்ந்தவன். 2012–ம் ஆண்டு புனே தொடர் குண்டு வெடிப்பில் இவன் முக்கிய பங்கு வகித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அசதுல்லா அக்தர் சமீபத்தில் தற்கொலை தீவிர வாதியாக மாறி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தகவலை யாசின் தெரிவித்தான். இதையடுத்து அக்தரிடம் தேசிய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அசதுல்லா அக்தர் இந்தியாவில் தற்கொலை தாக்குதல் நடத்த தனக்கு பயிற்சி அளிக்கப்பட்டதை ஒப்புக் கொண்டான்.
வரும் மாதத்தில் இந்தியா வின் முக்கிய நகரம் ஒன்றில் அவன் கைவரிசை காட்ட திட்டமிட்டிருந்தான் -DINAVIDIYAL!