HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 16 December 2013

ராணுவத்தினர் முழு மரியாதையுடன் தென் ஆப்ரிக்க காந்தி இறுதிச்சடங்கு

தென் ஆப்ரிக்க காந்தி, என்றும் பலரால் போற்றப்படுபவரும், மனித நேயமிக்கவர் என்று பெயருடன் வாழ்ந்தவருமான தென் ஆப்ரிக்க மக்களின் இதயத்தில் இடம் பெற்ற நெல்சன் மண்டேலா இறுதிச்சடங்கு இன்று நடந்தது.
அவர் பிறந்த குனு என்ற கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உள்பட உலகத்தலைவர்கள் பலர் இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இவரது இறுதி ஊர்வலத்தின் தென்ஆப்ரிக்க நாட்டு மக்கள் ரோட்டின் இரு புறமும் குழுமி நின்று தங்களின் அன்பு தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அஹிம்சை வழியில் வெள்ளையர்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்காவின் காந்தி என வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலா ( 5ம் தேதி ) காலமானார் . இவரது உடலுக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா., நிர்வாகிகள் மற்றும் உலக முழுவதும் உள்ள தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜோகன்ஸ் பர்க்கில் ஒரு மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மக்கள் 3 நாட்களாக காத்து கிடந்து அஞ்சலி செலுத்தினர். பலர் ஆடிப்பாடியும், அழுதும் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இவரது உடல் இன்று முழு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
a -DINAVIDIYAL!