HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 16 December 2013

கங்குலியை வளைக்க காங்., - கம்யூ., தீவிரம்: சமாஜ்வாதியில் தோனியின் சகோதரர்

கிரிக்கெட் பின்னணி உடையவர்களை, அரசியலில் இழுக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், தோனியின் சகோதரர், சமாஜ்வாதி கட்சியில், நேற்று, இணைந்தார். கங்குலியை, வளைப்பதில், பா.ஜ., - காங்., - கம்யூ., கட்சிகளுக்கு இடையே, கடும் போட்டி நிலவுகிறது.

ராஜ்யசபா எம்.பி.,: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின், சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., ஆக உள்ள அவருக்கு, மத்திய அரசு, பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.இதன் மூலம், லோக்சபா தேர்தலில், சச்சினை தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுத்த, காங்., முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், மகேந்திர சிங் தோனியின் சகோதரர், நரேந்திர சிங் தோனி, முலாயம் சிங் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து உள்ளார்.அரசியலில் சேர்ந்து, நாட்டு மக்களுக்கு தொண்டாற்ற விரும்புவதாகக் கூறியுள்ள அவர், முலாயம் சிங்கை நேரில் சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவித்து, கட்சியில் சேர்ந்துள்ளார்.

இதற்கிடையே, 'இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் தரத் தயார்' என, பா.ஜ., அறிவித்துள்ளது.

பா.ஜ.,வின் இந்த அதிரடி அறிவிப்பால், அதிர்ச்சி அடைந்துள்ள மேற்கு வங்க மாநில காங்., தலைவர், பிரதீப் பட்டாச்சார்யா, கங்குலியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து உள்ளார். அவர், கங்குலியை காங்., கட்சியில் இணைய அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.


-DINAVIDIYAL!