எலக்ட்ரிக்கல் பிரச்னை காரணமாக சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்ட 13 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக பிஎமட்பிள்யூ அறிவித்துள்ளது.
5 சீரிஸ் மற்றும் 6 சீரிஸ் சொகுசு செடான் கார்களின் பேட்டரி ஒயர்களின் மேலுறை சரியாக பொருத்தப்படாததால் பல்வேறு எலக்ட்ரிக்கல் பிரச்னைகள் ஏற்படுவதாக பிஎம்டபிள்யூவுக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து ஆய்வு பிஎம்டபிள்யூ நடத்திய ஆய்வில் கடந்த 2003 முதல் 2010ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு சதவீதம் கார்களில் பிர்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், செல்ப் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை ஏற்படவும், தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதும் தெரிந்தது
இதையடுத்து, மேற்கண்ட காலகட்டத்தில் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்ட 13 லட்சம் 5 சீரிஸ் மற்றும் 6 சீரீஸ் செடான் கார்களை திரும்ப பெற பிஎம்டபிள்யூ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 3.28 லட்சம் கார்கள் திரும்ப பெறப்படுகிறது.
அடுத்த ஜெர்மனியில் 2.93 லட்சம் கார்களும், பிரிட்டனில் 1.09 லட்சம் கார்களும், சீனாவில் 1.02 லட்சம் கார்களும் திரும்ப பெறப்பட உள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-DINAVIDIYAL!
