HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

பிரான்ஸில் இஸ்லாமியவாதிகள் 19 பேர் கைது

பிரான்ஸ் எங்கிலும் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 19 பேரை பொலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
பல்வேறு தாக்குதல்களில் 7 பேரை கொலை செய்த துப்பாக்கிதாரியான முஹமட் மெர்ராவின் வாழ்விடமான தென் மேற்கு நகரான தொலிஸ் பகுதியிலேயே பலர் கைதாகியுள்ளனர்.
இஸ்லாமிய கடும்போக்காளர்களை கைது செய்வதை இலக்காகக் கொண்ட பல நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அதிபர் சர்கோஸி கூறியுள்ளார்.
முஹமட் மெர்ரா தனது அடுக்கு மாடிக் குடியிருப்பில் வைத்து பொலிஸாரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அவருடன் தொடர்புடையவர்களைத் தேடி வருவதாக அரச வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர்.     -DINAVIDIYAL!