சென்னை: டிஜிபி லத்திகா சரண் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபி லத்திகா சரண், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இவர்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது, சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார். 1976ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார்.
கடந்த 36 ஆண்டுகளாக போலீஸ் துறையில் பணியாற்றியுள்ளார். முதல்வர், ஜனாதிபதியிடம் பல பதக்கங்களை பெற்றுள்ளார். இவர், பல்வேறு
மாவட்டங்களில் எஸ்பியாகவும், சரக டிஐஜியாகவும் பணியாற்றியதோடு, சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய துறைகளிலும் பணியாற்றியுள்ளார். சென்னை
போலீஸ் கமிஷனராகவும், டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அதிமுக ஆட்சி க்கு வந்தவுடன், போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாக
மாற்றப்பட்டார். தமிழகத்தில் முதல் பெண் டி.ஜி.பி. என்ற அந்தஸ்தை பெற்றவர் லத்திகா சரண் என்பது குறிப்பிடத்தக்கது.
-DINAVIDIYAL!