காரக்பூர்: ஐ.எஸ்.சி மற்றும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தி்ல் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலையில் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுவர் என பல்கலை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல்கலை உயர் அதிகாரி கூறியதாவது: மேற்கண்ட பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறும் பட்சத்தி்ல அவர்கள் வரும் கல்வியாண்டான 2013 முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எவ்வித தேர்வும் இன்றி நேரடியாக கல்லூரியி்ல் சேர்த்துக்கொள்ளப்படுவர் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆண்டரி்யூ ஹாமில்ட்டன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் தற்போதைய விதிப்படி வெளிநாட்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்னதாக நடத்தப்படும் நுழைவுத்தேர்வை கட்டாயமாக எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
ஆனால் திருத்தப்பட்ட புதிய விதியின்படி, சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.எஸ்.சி., படித்த மாணவர்கள், இந்தியாவின் ஐ.ஐ.டி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என தெரிவித்துள்ளார்.-dina vidiyal .