HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 29 March 2012

சச்சினுக்கு கால் விரலில் காயம்-ஐபிஎல் 5 தொடரில் பங்கேற்பது சந்தேகம்: பிசிசிஐ

-DINAVIDIYAL!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சச்சினின் கால் விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் 5 டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 5 டுவென்டி20 கிரிக்கெட் தொடர் வரும் 4ம் தேதி முதல் துவங்கிறது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உட்பட 9 அணிகள் பங்கேற்க உள்ளன. கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி 2வது இடத்தை பெற்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 5 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றார் போல ஆசியக் கோப்பை தொடரில் 100வது சதமடித்து சாதனை படைத்த சச்சின் தனது பார்மை நிரூபித்தார்.

இதனால் ஐபிஎல் தொடரில் சச்சின் சிறப்பாக ரன்களை குவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் சச்சினுக்கு நீண்ட காலமாக கால் விரலில் இருந்த காயம் தற்போது வலியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ சோதனைக்கு பிறகு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ தரப்பில் கூறியதாவது

கால் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சச்சின் லண்டன் சென்றுள்ளார். அவரது காயத்தை டாக்டர்கள் பரிசோதித்து பிறகு, தகுந்த ஆலோசனைகள் வழங்குவார்கள். சச்சினின் நீண்ட நாள் காலத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் 5 கிரிக்கெட் தொடரில் சச்சின் பங்கேற்பது சந்தேகமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால் காயத்திற்காக சச்சின் லண்டன் புறப்பட்டு சென்றதால், மும்பையில் நடைபெற்ற முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிடின் பிரிவு உபசார நிகழ்ச்சியில் சச்சின் கலந்து கொள்ள முடியவில்லை.