HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 29 March 2012

டிராவிட்டுக்கு பிசிசிஐ பாராட்டு

மும்பை: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற டிராவிட்டிற்கு பிசிசிஐ சார்பில் மும்பையில் நேற்று பாராட்டுவிழா நடந்தது. இதில் டிராவிட்டுடன் விளையாடிய கும்ப்ளே, கங்குலி, டோனி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கவாஸ்கர், வடேகர், பிஷன்சிங் பேடி, மொகிந்தர் அமர்நாத், வெங்க்சர்க்கார் மற்றும் தற்போதைய இந்திய அணி வீரர்கள் இடம்பெற்றனர். டெண்டுல்கர், பிசிசிஐ தலைவர் சீனிவாசன், முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை. விழாவில் பேசிய டிராவிட், பிசிசிஐ மற்றும் தன்னுடன் விளையாடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அவருக்கு பிசிசிஐ செயலாளர் சஞ்சய் ஜக்தலே நினைவுப்பரிசு வழங்கினார். விழாவில் டிராவிட் பேசும்போது, 16 வருடம் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஓய்வுபெற வேண்டும் என்று நினைத்தபோது கும்ப்ளே, கங்குலி ஆகியோர் இப்போதே அறிவித்துவிடு என்று தெரிவித்தனர். அவர்கள் அறிவுரைப்படி உடனடியாக ஓய்வு பெற்றேன். டோனி இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன். அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். கங்குலியிடம் நான் 5 வருடம் துணை கேப்டனாக இருந்துள்ளேன்.

எத்தனை ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் இருவரும் கணவன், மனைவி போல் இணைந்து செயல்பட்டோம். இந்தியாவின் வெற்றி ஒன்றையே மனதில் வைத்து விளையாடினோம். அவருக்கு எனது தனிப்பட்ட நன்றி யை தெரிவித்து கொள்கிறேன் என்று உருக்கமாக கண்ணீர்விட்டு பேசினார். அவரை பாரா ட்டி டோனி பேசும்போது, எந்த சூழ்நிலையிலும் அணிக்காக தனது முழு பங்களிப்பையும் செயல்படுத்தக்கூடியவர் என்றார்.

கங்குலி கூறுகையில், என்னை அனைவரும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்று அழைக்கிறார்கள். இந்த புகழுக்கு பின்னால் டிராவிட்டும், ஜான்ரைட்டும் (முன் னாள் பயிற்சியாளர்) இருப்பது எனக்கு மட்டும்தான் தெரியும். டிரா விட் எல்லா வகையிலும் பெருமைக்குரியவர் என்றார்.
பிசிசிஐ செயலாளர் ஜக்தலே பேசும்போது, டிராவிட் கிரிக்கெட்டை இழந்துவிடவில்லை. ஏனெனில் அவர் இந்தியாவுக்காக தனது முழு பங்களிப்பையும் செய்து முடித்துள்ளார் என்று தெரிவித்தார்.