HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Friday, 30 March 2012

75 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி


கொழும்பு : இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில் இலங்கை அணி 75 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இரண்டு இன்னிங்சிலும் தலா 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் ஆட்ட நாயகன் விருது பெற்றார். காலே சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டியில், முதல் இன்னிங்சில் இலங்கை 318 ரன், இங்கிலாந்து 193 ரன்னுக்கு ஆட்டமிழந்தன. 125 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 214 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து 340 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்தது. டிராட் 40, பீட்டர்சன் 29 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பீட்டர்சன் மேற்கொண்டு 1 ரன் மட்டுமே சேர்த்து ரந்திவ் சுழலில் வெளியேறினார். பெல் 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

டிராட் , பிரையர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. பிரையர் 41 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் ஹெராத் , ரந்திவ் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அணிவகுப்பு நடத்தினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பொறுப்புடன் விளையாடிய டிராட் சதம் விளாசினார். அவர் 112 ரன் எடுத்து (266 பந்து, 10 பவுண்டரி) ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 99 ஓவரில் 264 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி 12 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பந்துவீச்சில் ஹெராத் 6, ரந்திவ் 4 விக்கெட் வீழ்த்தினர். இப்போட்டியில் மொத்தம் 12 விக்கெட் கைப்பற்றிய இலங்கை வீரர் ஹெராத் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இலங்கை 1,0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் ஏப்ரல் 3ம் தேதி கொழும்பு