-DINAVIDIYAL!
லண்டன் : லண்டன் சென்ற சச்சின், புற்றுநோய்க்கான சிகிச்சை முடிந்து லண்டனில் உள்ள தன் நண்பர் வீட்டில் தங்கி ஓய்வு எடுக்கும் யுவராஜ் சிங்கை, சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், முழுமையாக குணமடைந்து, விரைவில் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென சச்சின் விருப்பம் தெரிவித்துள்ளார். யுவி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர் யுவராஜ் சிங்கிற்கு நுரையீரலின் நடுவே புற்றுநோய் கட்டி ஏற்பட்டது. இதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் புற்றுநோய் ஆய்வு மையத்தில் கீமோதெரபி சிகிச்சை பெற்றுவந்தார். மூன்று கட்ட சிகிச்சைகளும் முடிந்து, தற்போது விரைவாக உடல்நலம் தேறி வருகிறார். இந்நிலையில், தனது கால் காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ள சச்சின், தன் நண்பர் வீட்டில் ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கும் யுவராஜை நேரில் சந்தித்தார். அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறிய சச்சின் யுவியுடன் ஒரு மணி நேரம் செலவிட்டார். மேலும், யுவராஜ் முழுமையாக குணமடைந்து, விரைவில் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென வும் விருப்பம் தெரிவித்தார். சச்சினின் இந்த ஆறுதல் வார்த்தைகள் தனக்கு மேலும் ஊக்கமளித்திருப்பதாக யுவராஜ் கூறியிருக்கிறார்.
