மதுரை: சென்னை அண்ணா பல்கலை சார்பில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான்., பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான டான்செட், மார்ச் 31, ஏப்.,1 ல் நடக்க உள்ளது.
எம்.பி.ஏ., மாணவருக்கு மார்ச் 31ல், காலை 10 முதல் 12 மணி வரையும், எம்.சி.ஏ.,வுக்கு பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரையும், பிற படிப்புகளுக்கு ஏப்., 1ல், காலை 10 முதல் 12 மணி வரையும் தேர்வுகள் நடைபெறும்.
மதுரையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மன்னர் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பெண்கள் பாலிடெக்னிக், கே.எல்.என்., இன்பர்மேஷன் டெக்னாலஜி கல்லூரி, கே.எல்.என்., பொறியியல் கல்லூரி, பி.டி.ஆர்., பொறியியல் கல்லூரி, சவுராஷ்டிரா கல்லூரி, தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி மையங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கான விசாரணை அலுவலகம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், மார்ச் 30ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.
-DINAVIDIYAL!