-DINAVIDIYAL!
.நா. மனித உரிமைக் கவுன்சில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே ஒழிய இலங்கை அரசாங்கத்தின் முடிவை அது எவ்வகையிலும் பிரதிபலிக்கவில்லை என இலங்கை அமைச்சரவை சார்பாகப் பேசவல்ல அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதில் அளித்திருக்கவில்லை என்றும் அதன் உத்தியோகபூர்வ பதில் இனிதான் தெரிவிக்கப்படும் என்றும் யாப்பா கூறினார்.ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேறியிருந்த நிலையில், அத்தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிக்கும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அது பற்றி பத்திரிகையாளர் வினவியபோதே லக்ஷ்மண் யாப்பா அபெயவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும் எனஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸில் தீர்மானம் வலியுறுத்துகிறது.
ஆனால் எல்.எல்.ஆர்.சி.யின் பரிந்துரைகள் வருவதற்கு முன்பாகவேகூட அப்பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கிறது என்று யாப்பா தெரிவித்தார்.
படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ பதிலை இன்னும் வழங்கியிருக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் கூறினார்.
எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதறான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருவதாகவும், அப்பரிந்துரைகளை செயல்படுத்துவதில் இலங்கைக்குப் பொருத்தமான ஒரு வழிமுறை கையாளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.