HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Friday, 30 March 2012

சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற திமுக சோனியாவிடம் வலியுறுத்தல்


சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கை துரிதமாக நடத்தி முடித்து தற்போது இடைநிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அந்த திட்டத்தை மீண்டும் துவங்கக் கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் இந்திய நடுவணரசின் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சோனியா காந்தியை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
திமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி ஆர் பாலு தலைமையில் சோனியாவை சந்தித்த இந்த குழு தங்களின் கோரிக்கையை விளக்கும் மனு ஒன்றையும் அளித்திருக்கிறார்கள். தங்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட சோனியாகாந்தி, இந்த விடயத்தில் ஆவன செய்யும்படி மத்திய அரசுக்கு தெரிவிப்பதாக தமக்கு உறுதியளித்ததாக டி ஆர் பாலு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
மேலும் இதே கோரிக்கையை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலியுறுத்தினார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கையை மறுத்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சேதுக்கால்வாய் அமைக்கப்படும் இடத்தில் இருக்கும் மணற் திட்டுக்கள், ராமர் பாலம் என்று கருதப்படுவதால் அதை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இவர்களுக்கு இடையிலான மோதலையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த அமளியின்போது இரு அவைகளிலும் இருந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
அவை மீண்டும் கூடியதும் இதே பிரச்சனையை அவர்கள் எழுப்பியதால் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைக்கப்பட்டது.
அதே போல மக்களவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியதும் விஜயசாந்தி உள்ளிட்ட ஆந்திர எம்.பி.க்கள் எழுந்து தெலுங்கானா கோரிக்கையை எழுப்பினார்கள். இதனால் சபையில் அமளி ஏற்பட்டு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.-DINAVIDIYAL!