அறிவியல் துறையில் ஆர்வமிக்க பி.இ., பி.டெக். மாணவர்களுக்கும் எம்.எஸ்சி. இயற்பியல் மாணவர்களுக்கும் கோடை காலத்தில் உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கிறது இந்தூரில் உள்ள ராஜா ராமண்ணா சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி.
அறிவியல் துறைகளுக்கும் அறிவியல் துறை ஆய்வுகளுக்கும் திறமைமிக்க இளைஞர்களை ஈர்க்க, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிவியல் பாடப்பிரிவுகளில் ஆர்வமிக்க மாணவர்களை ஆய்வுத் துறைகளின் பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதிதான் கோடைகாலப் பயிற்சி. ஆக்ஸிலேட்டர்ஸ், லேசர் போன்ற அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆய்வகங்களைக் கொண்ட முக்கியக் கல்வி நிறுவனம் இந்தூரில் உள்ள ராஜா ராமண்ணா சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி. மத்திய அரசின் அணுசக்தித் துறையின் முயற்சியால் தொடங்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நிறுவனம் இது.
சூப்பர் கண்டக்டிவிட்டி, கிரையோ ஜெனிக்ஸ், மேக்னட்டிஸம், செமி கண்டக்டர்ஸ், அல்ட்ரா பாஸ்ட் ஸ்டடீஸ், நான்லீனியர் ஆப்டிக்ஸ், லேசர் கூலிங் ஆஃப் ஆட்டம்ஸ், லேசர் பிளாஸ்மா இன்டராக்ஷன், லேசர் மெட்டீரீயல்ஸ், அப்ளிக்கேஷன் ஆஃப் சின்க்குரோட்ரான் ரேடியேஷன், பயோ மெடிக்கல் அப்ளிக்கேஷன்ஸ் ஆஃப் லேசர்ஸ் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வுத் திட்டங்கள் இங்கு நடைபெறுகின்றன. நான்லீனியர் குவாண்டம் ஆப்டிக்ஸ், நான்லீனியர் டைனமிக்ஸ் இன் ஆக்ஸலேட்டர்ஸ், ஃப்ரீ எலெக்ட்ரான் லேசர்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், ஸ்டடீஸ் ஆன் லைட் புராபகேஷன் இன் டர்பிட் மீடியா அண்ட் அப்ளிக்கேஷன்ஸ் இன் பயோ மெடிசின் போன்ற துறைகளில் தியரிட்டிக்கல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
அறிவியல் துறையின் நவீனப் போக்குகள் குறித்த ஆய்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்தி, அந்த அறிவியல் தொழில்நுட்பத் துறைகளின் பக்கம் மாணவர்களை ஈர்ப்பதற்காக இந்த மையத்தின் சார்பில் கோடை காலத்தில் யங் சயின்டிஸ்ட் ரிசர்ச் புரோகிராம் நடத்தப்படுகிறது. என்ஜினீயரிங் பிசிக்ஸ், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி ஆகிய துறைகளில் பி.இ., பி.டெக். மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்தக் கோடை கால ஆய்வுப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். தற்போது எம்.எஸ்சி. இயற்பியல் பட்டப் படிப்பில் முதல் ஆண்டு படித்து வரும் மாணவர்களும் எம்.எஸ்சி. இயற்பியல் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில் நான்காவது ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்தக் கோடைகால ஆய்வுத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அத்துடன் மாணவர்களைப் பரிந்துரைக்கும் கடிதம் ஒன்றை பேராசிரியர்களிடம் பெற்று விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை தபால் மூலமோ ஃபேக்ஸ் மூலமோ அனுப்பலாம் அல்லது இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.
இந்தக் கோடைகாலப் பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வந்து செல்ல இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும். அத்துடன் மாதம் ரூ.2,500 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். ராஜா ராமண்ணா சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி கல்வி நிலைய விருந்தினர் இல்லத்தில் மாணவர்களுக்கு இலவச தங்குமிட வசதியும் செய்து தரப்படும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வருகிற மே 14ம் தேதியிலிருந்து ஜூலை 6ஆம் தேதி வரை இந்த மையத்தில் எட்டு வாரங்கள் தங்கியிருந்து குறிப்பிட்ட ஆய்வுத் திட்டத்தில் பணி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிக் கால முடிவில், மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கல்வி நிலையத்திலேயே பிஎச்.டி. ஆய்வை மேற்கொள்ள வசதிகள் இருப்பதால், இந்தக் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்களும் இந்தக் கோடை காலப் பயிற்சியை பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் அது உபயோகமாக இருக்கும். அறிவியல் ஆய்வுகளில் ஆர்வமிக்க மாணவர்கள் கோடை கால விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு இது. இந்த நல்ல வாய்ப்பை இயற்பியல் முதுநிலைப் பட்ட மாணவர்களும் என்ஜினீயரிங் மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்!
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. Rajeev Khare,
Laser Systems Engineering Section,
Raja Ramanna Centre for Advanced Technology
P.O.: CAT, Indore - 452 013
Ph. No.: +91 731 244 2439
Fax: +91 731 244 2400
E-Mail: ysrp (at) rrcat.gov.in
Dr. Aparna Chakrabarti,
Indus Synchrotrons Utilization Division,
Raja Ramanna Centre for Advanced Technology
P.O.: CAT, Indore - 452 013
Ph. No.: +91 731 244 2178
Fax: +91 731 244 2140
E-Mail: ysrp (at) rrcat.gov.in
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பக் கடைசிதேதி: 23-03-2012
-DINAVIDIYAL!