சென்னை: கிராமப் புறங்களில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில், எந்த நேரமும் அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் இதர பிரசவ சேவை மற்றும் மருத்துவ சேவை அளிக்கும் வகையில், ஒரு சுகாதார மாவட்டத்திற்கு 1 என்ற அடிப்படையில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அத்தகைய தாய்- சேய் நல மையங்களாக மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இந்த மையங்கள் கர்ப்ப கால முன் மற்றும் பின் பராமரிப்பு, அவசர கால பிரசவ சேவை, பாதுகாப்பான கரு கலைப்பு, அறுவை சிகிச்சை சேவைகள் போன்ற மாகப்பேறு சார் குழந்தைகள் நல சேவையினை வழங்கும் என்றும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையங்களாக செயல்படும்.மேலும், இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் பணியாற்றுவதற்கு கூடுதலாக ஒரு மருத்துவ அதிகாரி மற்றும் ஒரு செவிலியர் பதவிகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், தொலை தூரத்தில் எளிதில் சென்றடைய முடியாத நிலையில் உள்ள 31 துணை சுகாதார மையங்கள், முதல் நிலை தாய்-சேய் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும். இங்கு முழு நேர சேவை கிடைக்க வகை செய்யும் வகையில் ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதலாக 2 செவிலியர் பதவியும் மற்றும் 1 சுகாதார பணியாளர் பதவியும் உருவாக்கப்பட உள்ளன. இந்த புதிய திட்டங்களுக்காக அரசுக்கு 19.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். -dina vidiyal .