பனாஜி: ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவின் வருகையினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேலும் பலமடைந்திருப்பதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் சதாப் ஜகாதி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ளவிருக்கும் 9 அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியி்ல் புதியவராக ரவிந்தர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரவிந்திர ஜடேஜாவின் வருகையால் சென்னை அணியின் பலம் அதிகரித்திருப்பதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் சதாப் ஜகாதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
எனது பந்துவீச்சு சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன். எனது பந்துவீச்சில் தவறு ஏற்படும் வாய்ப்பு குறைவு. சிறப்பான எனது பந்துவீச்சு மூலம் இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று நம்புகிறேன்.
காயம் காரணமாக 4 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்தேன். சமீபத்தில் கோவா பிரீமியர் லீக் டுவென்டி20 தொடரில் பங்கேற்று விளையாடினேன். இதன் மூலம் எனது ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அணியில் இந்த ஆண்டு ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. சென்னை அணியின் பீல்டிங் மற்றும் பந்துவீ்ச்சிற்கு அவர் பக்கபலமாக செயல்படுவார் என்றார்.-DINAVIDIYAL!