தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உயர்கல்வித் துறை குறித்து ஆற்றிய உரையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.
அதாவது,
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்திற்கு ரூ.2000 ஒதுக்கீடு
தனியார் பள்ளிகள் 25 சதவீத இடத்தை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்காக ரு.2000 கோடி ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வி இயக்கம் ரூ.1891 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
6 முதல்14 வயதுள்ள அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கை பெற வேண்டும்.
1முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா வண்ண பென்சில் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்.
1 முதல் 10ம் வகுப்புமாணவ, மாணவியருக்கு விலை இல்லா நோட்டுப் புத்தகம் வழங்கப்படும்.
1 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் விடுதிகளில் பயில்வோருக்கு உணவுப் படி அதிகரிப்பு. இதற்காக 76 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மாணவ,மாணவியருக்கு புதிதாக 44 விடுதிகள் கட்டப்படும்.
சுயநிதி கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் மேம்பாட்டிற்கு ரூ. 6108 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உணவுப்படி அதிகரிப்பு
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளை மேம்படுத்த நடவடிக்கை.
6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஜாமென்ட்ரி பாக்ஸ்
பள்ளிக் கல்வித் துறைக்கு 14552.82 கோடி ஒதுக்கீடு
-DINAVIDIYAL!
-DINAVIDIYAL!