கொழும்பு: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் தரவரிசையில் நம்பர்.1 இடத்தை தக்கவைத்து கொண்டது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்திருந்தது.
இதனையடுத்து போட்டியின் கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர்.1 இடத்தை இங்கிலாந்து அணி தக்கவைத்து கொண்டுள்ளது..இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து அணி 1-1 என்று சமன் செய்தது.-DINAVIDIYAL!