HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 8 April 2012

அமெரிக்காவில் அபார்ட்மென்ட் மீது ஜெட் விமானம் மோதல்


விர்ஜினியா: விர்ஜினியாவில் அடுக்குமாடி கட்டிடத்தின் மீது கப்பற்படையை சேர்ந்த ஜெட் விமானம் மோதி நொறுங்கியது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி அல் கய்தா தீவிரவாதிகள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக புகழ் பெற்ற இரட்டை கோபுரங்கள் மீது விமானங்களை மோதி தகர்த்தனர். அதன்பின் அமெரிக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் விர்ஜினியா மாநிலத்தில் கடற்கரையோரம் இருந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நேற்று ஜெட் விமானம் ஒன்று திடீரென மோதி நொறுங்கியது.

அங்கிருந்தவர்கள் தீவிரவாதிகள் தாக்குதலாக இருக்குமோ என்ற பீதியில் அலறி ஓடினர். கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். விமானம் நொறுங்கிய இடத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. தீவிர விசாரணையில் அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ஜெட் விமானம் என்பதும், அதில் வந்த 2 பைலட்கள் பாராசூட்டில் தப்பியதும் தெரிய வந்தது. விர்ஜினியாவில் அமெரிக்காவின் கப்பற்படை முகாம் உள்ளது. இங்கு பயிற்சியில் ஈடுபட்ட போது ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.-DINAVIDIYAL!