HAPPY PONGAL WISHES
Sunday, 8 April 2012
தங்கம் சவரனுக்கு ரூ.288 சரிந்தது
சென்னை: நகை வியாபாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக மாற்றமின்றி இருந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.36ம், சவரனுக்கு ரூ.288ம் சரிந்தது. மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி தங்கத்துக்கான வரி 2லிருந்து 4 ஆக உயர்த்தப்பட்டதுடன், பிராண்ட் அல்லாத நகைகளுக்கு 1 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகை வர்த்தகங்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்தது.
இந்நிலையில், நகை வர்த்தக சங்க பிரதிநிதிகள் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர். அப்போது, வரியைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முகர்ஜி உறுதி அளித்ததையடுத்து, நேற்று நகைக் கடைகள் திறக்கப்பட்டன. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2,632க்கும், ஒரு சவரன் ரூ.21,056க்கும் விற்பனையானது. இது முந்தைய விலையான ரூ.21,344விட ரூ.288 குறைவு ஆகும். இதுபோல் 24 காரட் 10 கிராம் தங்கம் நேற்று ரூ.28,145க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் ரூ.60.10க்கும் ஒரு கிலோ ரூ.56,145க்கும் விற்பனையானது. -DINAVIDIYAL!