காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நடந்த தொடர் தாக்குதல் பீதி முடிவதற்குள் மேலும் ஒரு பெரும் தாக்குதலை நடத்த தீட்டப்பட்ட சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனால் பெரும் அளவில் நிகழவிருந்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆப்கனில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த கடத்தல் சம்பவம் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. ஒரு டிரக்கில் 5 பேர்களுடன் உருளைக்கிழங்கு லோடு ஏற்றி சென்றது. இதில் சோதனையிட்டபோது 40 பைகளில் வெடிகுண்டு மற்றும் சக்திவாய்ந்த வெடிக்கும் தன்மை கொண்ட மூலப்பொருட்கள் இருந்தது. 10 ஆயிரம் கிலோ இருந்தது.
இதனையடுத்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பபட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் ஆப்கன் முழுவதும் ரத்தக்களறியாகியிருக்கும் என பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஷகிபுல்லா தகிரி கூறினார்.
கடந்த வாரம் பிரிட்டன், அமெரிக்க தூதரகம் முன்பு நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 50 பேர் பலியாயினர் என்பது நினைவிருக்கலாம்.
-DINAVIDIYAL!