HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

மெர்சிடிஸ் பென்சை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்தை பிடித்த ஆடி!

கடந்த 3 மாதங்களின் விற்பனையில் பென்சை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்தை பிடித்துள்ளது ஆடி கார் நிறுவனம்.

ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் இந்திய மார்ககெட்டில் வேகமாக பிரபலமாகி வருகிறது. மேல்தட்டு மக்களிடையே ஆடி கார்கள் மீது தனி கவர்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால், அந்த நிறுவனத்தின் கார் விற்பனை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களின் கார் விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருந்த பென்சை பின்னுக்குத் தள்ளி ஆடி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேபோன்று வளர்ச்சி கண்டால், ஆடிக்கு இரண்டாம் இடம் நிரந்தரமாகும். ஜனவரி-மார்ச் இடையிலான காலத்தில் 2369 கார்களை விற்று பிஎம்டபிள்யூ முதல் இடத்திலும், 2269 கார்களை விற்று ஆடி இரண்டாவது இடத்திலும், 2130 கார்களை விற்று மெர்சிடிஸ் பென்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருந்த பென்ஸ் தற்போது விற்பனையில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.-DINAVIDIYAL!