தோஷிபா சமீபத்தில் தனது 3 புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டேப்லெட்டுகள் எக்ஸைட் வரிசையில் வருகின்றன. இந்த 3 டேப்லெட்டுகளும் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம், 1.3 ஜிஹெர்ட்ஸ் க்வட்கோர் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் கொண்டுள்ளன.
எக்ஸைட் 13 டேப்லெட் 1600×900 பிக்சல் ரிசலூசன் கொண்ட 13.3 இன்ச் ஆட்டோ ப்ரைட் பேக்லிட் எல்இடி டிஸ்ப்ளே, 5 எம்பி பின்பக்க கேமரா, 2 எம்பி முகப்பு கேமரா, மைக்ரோ எச்டிஎம்ஐ, மினி யுஎஸ்பி மற்றும் முழு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆகிய அம்சங்களைக் கொண்டு வருகிறது. இதன் பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 13 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த எக்ஸைட் 13 டேப்லெட் 32ஜிபி மற்றும் 64ஜிபி என இரண்டு மாடல்களில் வருகிறது.
அடுத்ததாக எக்ஸைட் 10 டேப்லெட் 1280 x 800 பிக்சல் ரிசலூசனுடன் 10.1 இன்ச் டயகோனல் ஆட்டோ ப்ரைட் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இந்த டிஸ்ப்ளே மல்டி டிஸ்ப்ளே வசதி கொண்டது. மேலும் இந்த டேப்லெட் 5 எம்பி பின்பக்க கேமரா, 2 எம்பி முகப்பு கேமரா, மைக்ரோ யுஎஸ்பி, மைக்ரோ எச்டிஎம்ஐ மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதன் எடை 598 கிராம் மட்டுமே.
இறுதியாக வரும் எக்ஸைட் 7.7 டேப்லெட் 7.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. மேலும் 5 எம்பி பின்பக்க கேமரா, 2 எம்பி முகப்பு கேமரா, மைக்ரோ யுஎஸ்பி, மைக்ரோ எச்டிஎம்ஐ மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்ற வசதிகளை இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது.
இந்த 3 டேப்லெட்டுகளும் வரும் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றன. எக்ஸைட் 13.3ன் 32ஜிபி டேப்லெட் 649 அமெரிக்க டாலர்களுக்கும், 64ஜிபி டேப்லெட் 749.99 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனையாகும்.
எக்ஸைட் 10ன் 16ஜிபி டேப்லெட் 449.99 அமெரிக்கா டாலர்களுக்கும், 32ஜிபி டேப்லெட் 529.99 அமெரிக்க டாலர்களுக்கும் மற்றும் 64ஜிபி டேப்லெட் 649 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனையாகும்.
இறுதியாக எக்ஸைட் 7.7ன் 16ஜிபி டேப்லெட் 499.99 அமெரிக்க டாலர்களுக்கும், 32ஜிபி டேப்லெட் 579 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனையாகும்.-DINAVIDIYAL!