HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

நவீன வசதிகளுடன் வரும் புதிய சோனி வயோ லேப்டாப்

 சோனி சமீபத்தில் தனது சோனி வயோ இ வரிசையில் ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புக்கு வயோ இ சீரிஸ் 14பி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பைப் பற்றி அதிகத் தகவல்கள் வரவில்லை என்றாலும் இந்த லேப்டாப் ஒரு நவீன லேப்டாப்பாக இருக்கும் என சோனி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
இந்த லேப்டாப்பின் தொழில் நுட்பங்களைப் பார்த்தால் அவை சூப்பராக இருக்கின்றன. அதாவது 1366 x 768 பிக்சல் ரிசலூசன் கொண்ட 14 இன்ச் டிஸ்ப்ளே இந்த லேப்டாப்பிற்கு அசத்தலாக இருக்கிறது. மேலும் இன்டல் கோர் ஐ3 2550எம் சிபியு மற்றும் 4ஜிபி ரேம் ஆகியவை இந்த லேப்டாப்பிற்கு அதிக வலிமையைச் சேர்க்கும். இதில் செய்கைக் கட்டுப்பாட்டு வசதியும் உண்டு.
5.07 பவுண்டுகள் எடை மட்டுமே கொண்ட இந்த லேப்டாப் 1.3 மெகா பிக்சல் வெப்காமையும், 500ஜிபி ஹார்ட் ட்ரைவையும் மற்றும் ப்ளூடூத் 4.0 வையும் கொண்டிருக்கிறது.
இந்த லேப்டாப்பில் எஎம்டி ரேடியோன் எச்டி 7670எம் அல்லது இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 3000 ஆகியவற்றைத் தேர்ந்து கொள்ளலாம். அதனால் க்ராபிக்ஸ் வேலைகளை இந்த லேப்டாப்பில் சூப்பராக செய்ய முடியும். இதன் பேட்டரி 7 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.
இந்த லேப்டாப்பில் செய்கைக் கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளதால் இதில் வேலை செய்வது மிகவும் வேகமாகவும் அதே நேரத்தில் எளிதாகவும் இருக்கும். இந்த லேப்டாப்பில் பொழுதுபோக்கு அம்சங்களும் ஏராளமாக உள்ளன. அதனால் இந்த லேப்டாப்பில் பவர் பாயிண்ட், பவர் டிவிடி, விண்டோஸ் மீடியா ப்ளேயர் மற்றும் ஐஇ9 போன்றவை சிறப்பாக உள்ளன.
இந்த புதிய வயோ லேப்டாப் கருப்பு, வெள்ளை மற்றும் பிங்க் ஆகிய நிறங்களில் வருகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த லேப்டாப் வரும் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-DINAVIDIYAL!