HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Friday, 13 April 2012

ஓய்வுக்குப்பின் 5 ஏக்கரில் வீடு? சர்ச்சையில் சிக்கினார் ஜனாதிபதி

புதுடெல்லி : ஓய்வுக்குப் பின் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு அரசு செலவில் வீடு கட்டிக் கொ டுக்க புனேயில் ராணுவ நிலம் 5 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜனாதிபதியாக பணியாற்றியவர்களுக்கு ஓய்வுக்கு பின், இந்தியாவில் அவர்கள் விரும்பும் இடத்தில் அரசு செலவில் வீடு கட்டிக் கொடுக்கப்படும். இது மத்திய அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் பங்களாவுக்கு இணையாக இருக்க வேண்டும்.

 ஜூலை மாதம் ஓய்வு பெறும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு வீடு கட்டிக் கொடுக்க மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் காட்கி கன்டோன்மென்ட் பகுதியில் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ வீரர் சங்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சுரேஷ் பாட்டீல் என்பவர் தெரிவித்துள்ளார். அந்த இடத்தில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரு மாளிகைகள் இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ராணுவ தலைமையகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்  சுரேஷ் பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. 

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் அர்ச்சனா தத்தா, ‘‘ராணுவ நிலத்தை தனி நபருக்கு மாற்றுவது என்ற கேள்விக்கே இடம் இல்லை. அங்கு கட்டப்படும் வீட்டில் ஜனாதிபதி தனது ஆயுள்காலம் வரை இருப்பார். அவருக்குப்பின் மீண்டும் அந்த இடம் மீண்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப் படும். அந்த இடம் காலி இடம் அல்ல. அங்கு புது வீடு கட்டப்படவில்லை. ஏற்கனவே உள்ள கட்டிடம் புதுப்பிக்கப் படுகிறது. 

5 ஏக்கர் நிலம் சுற்றி வளை ப்பா என்ற கேள்விக்கு, ராணுவ அமைச்சகத்துக்கு மட்டுமே பதில் அளிக்க முடியும். இதில் விதிமுறை மீறல் எதுவும் இல்லை’’ என்றார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்கு இதுவரை ரூ.205 கோடி செலவழிக்கப்பட்டது என வெளியான செய்தி சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
தற்போது அவருக்கு கட்டப்படும் வீடு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.  
-DINAVIDIYAL!