மும்பை: விரலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வரும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது போலிஞ்சர் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சச்சினின் விரலில் காயம் ஏற்பட்டது. தனது காயம் பட்ட விரலின் புகைப்படத்தை சமீபத்தில் டிவிட்டர் மூலம் ரிலீஸ் செய்திருந்தார் சச்சின்.
அதன் பிறகு அவர் அடுத்து வந்த 2 போட்டிகளில் விளையாடவில்லை. இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பையில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சந்திக்கிறது. இப்போட்டியிலும் சச்சின் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
Read: In English
இதுகுறித்து மும்பை அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் போலாக் கூறுகையில், இது நீண்ட தொடர். எனவே சச்சினுக்கு இன்னும் நிறைய வாய்ப்புள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் அவர் தகுதியுடன் விளையாட வேண்டியது அவசியம். புதன்கிழமைப் போட்டி குறித்து எனக்குத் தெரியாது. இருப்பினும் அவர் சரியாக கால அவகாசம் உள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டியின்போது அவர் சரியாகி விடுவார் எனக் கருதுகிறேன் என்றார்.சச்சின் இல்லாததால் தொடக்க வீரராக அவருக்குப் பதில் இதுவரை அம்பட்டி ராயுடு, டி.சுமன் ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் பரிசோதித்துப் பார்த்துள்ளது. மற்றொரு தொடக்க வீரராக ரிச்சர்ட் லெவி சிறப்பாக ஆடி வருகிறார்.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது மும்பை. அடுத்து புனே வாரியர்ஸ் இந்தியாவிடம் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் அடுத்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. இன்று தனது 4வது போட்டியில் ராஜஸ்தானுடன் மோதுகிறது.-DINAVIDIYAL!