சென்னை: கூடங்குளம் அணுமின்
நிலையத்தில் தயாரிக்கப்படும்
மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க
வேண்டும் என்று பிரதமர்
மன்மோகன்
சிங்கை வலியுறுத்தி இருப்பதாக
மத்திய அமைச்சர்
நாராயணசாமி் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்
செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின்
நிலையத்தில் இன்னும் 2
மாதத்தில் மின்
உற்பத்தி துவங்கும். அடுத்த 2
மாதத்தில்
இரண்டாவது உலையிலும் மின்
உற்பத்தி துவங்கும்.
அங்கு உற்பத்தி செய்யப்படும்
மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க
வேண்டும் என்று தமிழகம்
கோரிக்கை விடுத்துள்ளது குறித்து பிரதமர்
மன்மோகன் சிங்
பரிசீலித்து வருகிறார். இந்த
கோரிக்கையை நானும் அவரிடம்
வலியுறுத்தியுள்ளேன்.
இது தொடர்பாக அவர் விரைவில்
நல்ல முடிவு எடுப்பார்.
டெல்லி நோக்கி ராணுவம்
படையெடுத்து வந்ததாக
வெளியான தகவல் தவறானது.
இது விஷமிகள் பரப்பிய
வதந்தி ஆகும். அந்த வதந்தியைப்
பரப்பியவர்கள் யார் என்று மத்திய
அரசு விசாரணை நடத்தி வருகிறது.
அவர்கள் மீது நிச்சயம்
கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைக்கு செல்லும்
எம்.பி.க்கள் குழுவில்
அனைத்து கட்சி உறுப்பினரும்
இடம்பெறுவது குறித்து மத்திய
அரசு ஆலோசித்து வருகிறது. அந்த
குழுவில் யார், யாரெல்லாம்
இருக்கிறார்கள் என்பது விரைவில்
தெரிவிக்கப்படும்.
கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்த
பிறகு குடியரசுத் தலைவர்
வேட்பாளரை காங்கிரஸ்
தேர்வு செய்யும் என்றார்.
-DINAVIDIYAL!