கொழும்பு:
இலங்கையில் மகாத்மா காந்தி, 2
தமிழர் அறிஞர்கள் உள்ளிட்ட
தலைவர்களின்
சிலைகளை விஷமிகள்
சேதப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் கிழக்கு நகரமான
பட்டிகலோயாவில் மகாத்மா காந்தி,
முன்னாள்
இங்கிலாந்து ஆட்சியாளரான
பாடன் பவல் பிரபு, 2 தமிழ்
அறிஞர்கள் உள்ளிட்ட
தலைவர்களின் சிலைகள் உள்ளன.
இதில் மகாத்மா காந்தி, தமிழ்
அறிஞர்கள், பவல் பிரபுவின்
சிலைகளை விஷமிகள்
சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து போலீஸ்
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கலை பொருட்களை சேதப்படுத்தவே இவ்வாறு செய்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்த
தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று எஸ்.பி.
அஜித்
ரொஹானா தெரிவித்துள்ளார்.
அண்மையில்
சுவிட்சர்லாந்து தலைநகர்
ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித
உரிமைக்குழு கூட்டத்தில்
இலங்கைக்கு எதிராக
அமெரி்க்கா கொண்டு வந்த
தீர்மானத்தை இந்தியா உள்பட 24
நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.
இந்தியா எப்படியும்
தங்களுக்கு ஆதரவாக
வாக்களிக்கும் என்று நம்பிய
இலங்கைக்கு இது பேரதிர்ச்சியாக
இருந்தது.
இதையடுத்து இலங்கையில்
இந்தியா மற்றும்
அமெரி்ககாவுக்கு எதிராக
ஆர்ப்பாட்டங்கள்
நடந்து வருகின்றன. இந்நிலையில்
இந்தியாவின் தேசத் தந்தையான
காந்தியின்
சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது இந்தியர்களை கடும்
அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.