சதாரா, ஏப்.5: மகாராஷ்டிராவில் வறட்சி நிவாரணப் பணிகளை சரியாகக் கையாளவில்லை என்று அந்த மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாணுக்கு வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வறட்சி குறித்த ஆய்வுக்கூட்டத்தின்போது விவசாயிகளுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவது பிரச்னையை கையாள உதவிசெய்யாது என்று சரத்பவார் குறிப்பிட்டார்.
ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து பச்சை மிளகாயும், இஞ்சி சட்னியும் சாப்பிட்டால் வறட்சி போன்ற பிரச்னைகள் தீர்ந்துவிடாது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சதாரா மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட சரத்பவார் தெரிவித்தார்.
சதாராவில் வறட்சி நிவாரணப் பணி குறித்த ஆய்வுக் கூட்டத்தின்போது விவசாயிகளுடனும், தொழிலாளர்களுடன் சேர்ந்த பிருத்விராஜ் சவாண் மதிய உணவு சாப்பிட்டதை சுட்டிக்காட்டி சரத்பவார் இவ்வாறு தெரிவித்தார்.-DINAVIDIYAL!