-DINAVIDIYAL!
மும்பை: மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே - மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த புனே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் எடுத்தது. உத்தப்பா 36, ஸ்மித் 39 ரன் எடுத்தனர். அதன் பின் விளையாடிய மும்பை அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 101 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் புனே அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராங்கிளின், கார்த்திக் தலா 32, ஹர்பஜன் 16 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். புனே அணியில் அசோக் டிண்டா 4, முரளி கார்த்திக் 2, சாமுவேல், பர்னல், ராகுல் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங் கூறும்போது, இந்தியாவுக்கு கிடைத்த சிறப்புமிக்க கேப்டன் கங்குலி. அதை இன்றைய ஆட்டத்திலும் அவர் நிரூபித்தார். அதனால் தான் அவர் எப்போதுமே மிகச்சிறந்த கேப்டனாக இருக்கிறார். அவரது அணி பல ஆட்டங்களில் வெற்றி பெறாவிட்டாலும் திறமைசாலிகளை அவர் கண்டுகொள்வார். அப்படிப்பட்ட வீரர்களுக்கு அவர் மதிப்பு அளிப்பார். அந்த வீரர்களை அவர் பயன்படுத்தும் விதம் பிரமிக்கத்தக்கதாக இருக்கும். 129 ரன் என்பது எளிதில் எடுக்கக்கூடிய ஒன்று. ஆனால் நாங்கள் சரியாக தொடங்க வில்லை. 2 ஓவர்களிலேயே தொடக்க வீரர்களை இழந்து விட்டதால் வெற்றி எங்கள் வசம் இல்லாமல் போய்விட் டது. இவ் வாறு அவர் கூறினார்