HAPPY PONGAL WISHES
Monday, 9 April 2012
பாக். அதிபர் - இந்தியப் பிரதமர் இடையே தில்லியில் சந்திப்பு
தனிப்பட்ட முறையில் அஜ்மீர் தர்காவுக்கு செல்வதற்காக ஒரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது மற்றவர்கள் யாரும் இன்றி தலைவர்கள் இருவரும் தனியாகப் பேசினர்.
இந்த சந்திப்பின் போது, மும்பை தாக்குதலின் சூத்திரதாரி என்று இந்தியா கருதும் ஹாஃபீஸ் சயீத் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை வைத்தே இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் கணிக்கப்படும் என்று அதிபர் ஜர்தாரியிடம் மன்மோகன் சிங் தெளிவுபடுத்தியதாக வெளியுறவுத் துறை செயலர் ரஞ்ஜன் மதாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது என்று ஜர்தாரியுடனான 40 நிமிட சந்திப்பின் போது பிரதமர் வலியுறுத்தியாதகவும் மத்தாய் கூறினார்.
அதேநேரம் இருதரப்புக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் எடுத்துவரும் முயற்சிகளை பிரதமர் மன்மோகன் சிங் இச்சந்திப்பின் போது அங்கீகரித்து பாராட்டியதாகவும் மத்தாய் தெரிவித்தார்.
இது தனிப்பட்ட பயணம் என்றாலும் இருதரப்பு உறவுகள் குறித்து தாங்கள் பயன்தரும் பேச்சுக்களை நடத்தியதாக இருதலைவர்களும் தெரிவித்தனர்.
புட்டோ மகன் பிலாவல்
அஜ்மீர் தர்காவுக்கு ஏற்கனவே தனது மனைவி பேனசிர் பூட்டோவுடன் வந்து சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, இந்த முறை தனது 23 வயது மகன் பிலாவல் புட்டோவையும் தன்னோடு அழைத்து வந்துள்ளார்.
புட்டோ குடும்ப வாரிசான இவருக்கு ஏற்கனவே பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது பாகிஸ்தானுக்கு மன்மோகன் சிங் வர வேண்டும் என்று ஜர்தாரி அழைப்பு விடுத்தார்.
இருதரப்புக்கும் ஏற்ற ஒரு தேதியில் பாகிஸ்தானுக்கு செல்ல தான் தயாராக இருப்பதாக மன்மோகன் சிங்கும் தெரிவித்தார்.
அதே நேரம் இரு தலைவர்களுக்கு இடையேயான இந்த சந்திப்பினால் பெரிதாக பயன் கிடைத்துவிடப் போவதில்லை என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.
மும்பையில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு மோசமடைந்த இரு நாட்டு உறவுகள் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகின்றன.
இருந்தும், பயங்கரவாதம், காஷ்மீர், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல விடயங்களில் இரு நாடுகளுகளின் அடிப்படை நிலைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது.
பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரி இந்தியா சென்றிருக்கிறார்.
கடந்த 7 ஆண்டுகளில் பாகிஸ்தானின் அரச தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு இப்போதுதான் விஜயம் மேற்கொள்கிறார்.
தில்லியிலுள்ள பாலம் விமானப்படைத் தளத்தில் இந்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவான் குமார் பன்ஸால் பாகிஸ்தான் அதிபரை சந்தித்துப் பேசினார்.
ராஜஸ்தானிலுள்ள பிரசித்திபெற்ற அஜ்மீர் தர்காவுக்கு செல்வதற்கு முன்னதாக, சர்தாரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மதியபோசன விருந்தில் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்புகள் இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், பிரச்சனைக்குரிய மற்ற விவகாரங்களைப் பொறுத்தவரை முன்னேற்றம் எதுவும் இருக்காது என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுஃபி முஸ்லிம் வழிபாட்டு தலத்துக்கான தனிப்பட்ட பயணமாகவே சர்தாரி இந்தியா சென்றுள்ளார்.
எனினும் அவருடன் சென்றுள்ள குறைந்தது 25 பேரடங்கிய குழுவில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கும், சர்தாரியின் அரசியல்வாரிசான அவரது மகன் பிலாவால் பூட்டோ சர்தாரியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சர்தாரி குழுவினர் ஆகாய மார்க்கமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்துக்குச் சென்றனர்.
இருநாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுக்கள், கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பைத் தாக்குதல்களின் பின்னர் முடங்கிப்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.-DINAVIDIYAL!