சீனாவில் தனது சிறுநீரகங்களை விற்ற பதின்ம வயது இளைஞன் ஒருவரது உடலில் அறுவை சிகிச்சை செய்திருந்த மருத்துவர் உட்பட ஐந்து பேர் மீது, அந்த இளைஞனின் உடலில் தெரிந்தே பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என சீன அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
சிறுநீரகத்தை விற்ற பணத்தைக் கொண்டு இந்த இளைஞன் ஐஃபோன் ஒன்றும் ஐபேட் ஒன்றும் வாங்கியிருந்தார்.
இணையவழி உரையாடல் சேவை ஒன்றின் வழியாக இந்த சட்டவிரோத சிறுநீரக விற்பனைக்கு இந்த பதினேழு வயது இளைஞன் சம்மதிக்கவைக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.
ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில் தனது மற்ற சிறுநீரகத்திலும் இந்த இளைஞனுக்கு கோளாறூகள் ஏற்பட்டுள்ளன என ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது.
சீனாவில் மனித உறுப்புகளுக்கான கறுப்புச் சந்தை வர்த்தகம் பெருமளவில் நடக்கிறது.
அந்நாட்டில் மாற்று உடலுறுப்பு தேவைப்படுவோரில் மிகக் குறைவானவர்களாலேயே சட்டபூர்வமாக அவற்றைப் பெற முடிகிறது.-DINAVIDIYAL!