HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 8 April 2012

ஜடேஜாவின் ஜாலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி


விசாகப்பட்டினம்: ஐபிஎல் 5 தொடரில் இன்றைய 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 194 என்ற வெற்றி இலக்கை துரத்திய டெக்கான் சார்ஜர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இறுதியில் தோல்வியை தழுவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஜடேஜா பேட்டிங்கில் 48 ரன்களும், பந்துவீச்சில் 5 விக்கெட்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தார்.

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய 2வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கன் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே துவக்க வீரர் முரளி விஜய் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 3 பவுண்டரிகளை அடித்த நிலையில் 16 ரன்களை எடுத்து அவுட்டானார்.

துவக்க வீரர் டு பீல்ஸ் 4 சிக்ஸ்களை அடித்து அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தி 39 ரன்களில் பவுண்டரி லைனில் கேட்சாகி வெளியேறினார்.

அணியின் ஸ்கோர் சரிவதை உணர்ந்த பத்ரிநாத், ஜடேஜா ஜோடி சேர்ந்தது. ஆனால் பத்ரிநாத் 25 ரன்களில் அவுட்டானார். ஐடேஜா மட்டும் அதிரடியை தொடர்ந்த நிலையில் கேப்டன் டோணி 7 ரன்களில் வெளியேறினார். அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 48 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார்.

இறுதிக் கட்டத்தில் வந்த பிராவோ 17 பந்துகளில் 5 சிக்ஸ்களை அடித்து 43 ரன்களை குவித்தார். கோணி வீசிய கடைசி ஓவரில் 23 ரன்களை பிராவோ விளாசினார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 193 ரன்களை குவித்தது.

194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் அதிரடி துவக்கத்தை அளித்தனர். ஆனால் டேனியல் ஹரீஸ்(15), ஷிக்கர் திவான்(21) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர்.-DINAVIDIYAL!