HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 11 April 2012

மொபைல் டவரில் "தீ?' துவாக்குடியில் பரபரப்பு

திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம் துவாக்குடி மேலத்தெருவில் பி.எஸ்.என்.எல்., மொபைல் ஃபோன் டவரும், அதனருகே ஜெனரேட்டர் அறையும் உள்ளது. நேற்று காலை ஏழு மணிக்கு ஜெனரேட்டர் அறையில் "குபு..குபு'வென புகை வந்தது.
அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்ததால், "மொபைல் ஃபோன் டவர் தீப்பற்றி எரிவதாக' அப்பகுதி மக்கள் நவல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதற்குள் பொதுமக்கள் சென்று பார்த்தபோது, ஜெனரேட்டர் அறையில் இருந்து புகை வருவதை கண்டு, மக்கள் ஒன்று திரண்டு மண்ணை எடுத்து போட்டு, தீயணைப்புத் துறையினர் வருவதுக்குள் தீயை அணைத்தனர். சம்பவ இடத்தில் பி.எஸ்.என்.எல்., உதவிப்பொறியாளர் முருகேசன் ஆய்வு செய்தபோது, மின்கசிவு காரணமாக "ஏஸி' மிஷினில் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-DINAVIDIYAL!