HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 11 April 2012

எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி

கூர்கான: எனக்கு புற்றுநோய் இருப்பது என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது எனக்கு சோதனையான காலமாக இருந்தது என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்ப நிலையில் இருந்ததால் கீமோ தெரடி மூலம் குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் கூறினர். இதனைதொடர்ந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள கேன்சர் சிகிச்சை மையத்தில் ஜனவரி மாதம் அட்மிட் ஆனார். இங்கு சிகிச்சைக்கு பின்னர் யுவராஜ் சிங் குணமடைந்துள்ளார். கடந்த மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட யுவராஜ் சிங் லண்டனில் ஓய்வெடுத்தார். ஓய்வுக்கு பின்னர் யுவராஜ் சிங் கடந்த 9ம் தேதி தாயகம் திரும்பினார்.

இந்தியா திரும்பிய பின் யுவராஜ் சிங் இன்று முதல்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:எனது உடல்நிலை குறித்து எனது தாயார் மிகவும் கவலைப்பட்டார். எனக்கு கடினமான நேரமாக இருந்தது. என்னை நான் வலுவாக வைத்து கொண்டேன். எனக்கு புற்றுநோய் இருக்கிறது என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தது. இதனை புரிந்து கொள்ளவும் கடினமாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது நான் சோதனையான காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு டாக்டர்கள் நல்ல முறையில் உதவினர். இதிலிருந்து மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. நோய் பாதித்திருந்த காலத்தில் வேலை செய்ய கடினமாக இருந்தது. ஒரு சில முறை உடற்பயிற்சி மையத்திற்கு சென்றேன். பிறகு மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டேன். 

நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என மக்கள் வாழ்த்தியுள்ளனர். இன்னும் ஒரிரண்டு மாதங்களில் கிரிக்கெட் விளையாட திரும்புவேன். எனது ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தனர். மீண்டும் கிரிக்கெட் வரசிறிது காலம் ஆகும்என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.எனது உடல்நிலை சீரான பின்னர் விரைவில் கிரிக்கெட் விளையாடுவேன். எனது தாயார் எனக்காக அழவில்லை. அவர் தைரியமாக இருந்தார். நான் குழப்பமான நிலையில் உருகிய போது எனக்கு ஆதரவாக இருந்தார். எந்த தாயாரும் இது போல் நோய் பாதித்த மகனை பார்த்து கொள்ள முடியாது.

நான் சச்சினுடன் தொடர்பிலிருந்தேன். அவர் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். லண்டனில் அவரை சந்தித்தது அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். சச்சின் 200 ரன்கள் எடுத்த போதும், 100வது சதம் எடுத்த போதும் நான் அங்கு இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் என்னால் முடியவில்லை . 

விளையாட்டு வீரர் என்ற முறையில் எங்களுக்கு காயம் ஏற்படுகிறது. தொடர்ச்சியான சிகிச்சை மேற்கொள்வதில்லை. இனிமேல் நாங்கள் அனைவரும் தொடர் சிகிச்சை பெற வேண்டும். கேன்சரிலிருந்து வெளிவருவது எளிதானது அல்ல. இதனை நான் எதிர்த்து வந்துள்ளேன். மற்றவர்களும் இந்த நோய்க்கு எதிராக போராட முடியும். எனக்கு வாழ்க்கை மீண்டும் கிடைத்துள்ளது. பிரார்த்தனைகள் எனக்கு கைகொடுத்துள்ளது. எனக்கு உதவியவர்கள் அனைவருக்கும நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காயம் காரணமாக எனக்கு கெட்ட காலம் இருந்தது. அது போன்ற நேரத்தில் தைரியமாக இருந்து மீண்டு வர வேண்டும். வாழ்க்கையை மக்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு நான் முன்மாதிரியாக இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் மூலம் மிகவும் புகழ் கிடைக்கலாம். õனால் பெற்றோர்கள் மூலம் தான் மகிழ்ச்சி கிடைக்கும். நான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். அழுத்தம் குறைந்துள்ளது. 

நான் அமைதியாக செயல்பட மீடியாக்கள் அனுமதிக்கவில்லை. எனது உடல்நிலை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தது. ஆனால் உடல்நிலை குறித்து அனைவரும் அறிந்திருந்தனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்புவது. எனக்கு இந்தியா முழுவதும் ஆதரவு இருந்தது. ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரை இழந்துள்ளேன். கங்கூலி சிறப்பாக விளையாடுகிறார். புனே அணி இறுதிப்போட்டிக்கு செல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்து கெள்கிறேன். புனே அணி உடையை அணிந்து ஆதரிக்க அணிய விருப்பமாக உள்ளது. எனக்கு அமெரிக்காவிலும் ஆதரவு இருந்தது. பாஸ்டன் மற்றும் இந்தியானா பகுதியில் பல இந்தியர்களை சந்தித்துள்ளேன் என கூறினார்.

-DINAVIDIYAL!