பள்ளி மாணாக்கருக்கு என்று இன்டெல் ஒரு புதிய ஸ்டடிபுக் டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட் பள்ளி மாணவ மாணவியருக்கு தங்கள் படிப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் தொழில் நுட்பங்களும் இந்த டேப்லெட்டில் ஏராளமாக உள்ளன.
-DINAVIDIYAL!
இந்த டேப்லெட் 1024 x 600 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் மல்டி டச் எல்சிடி திரையுடன் வருகிறது. இன்டல் ஆட்டம் ஸட்650 ப்ராசஸர் இந்த டேப்லெட்டை மிக வேகமாக இயக்கும். ஆன்ட்ராய்டு அல்லது விண்டோஸ் 7 இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எடை 525 கிராம் மட்டுமே.
இணைப்பு வசதிகளுக்காக யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்டி மற்றும் சிம் கார்டு ஸ்லாட்டுகள் போன்றவற்றைக் இந்த டேப்லெட் கொண்டிருக்கின்றது
1 ஜிபி ரேமைக் கொண்டிருக்கும் இந்த டேப்லெட்டின் 4ஜிபி மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். மேலும் நோஸ் இரீடர் அப், லேப்காம் சூட், 2 மெகா பிக்சல் கேமரா மற்றும் தூசு தடுப்பு வசதி போன்ற பல சிறப்புகளுடன் இந்த டேப்லெட் வருகிறது.
மாணவர்கள் டேப்லெட்டை சற்று கவனக்குறைவாகப் பயன்படுத்தினாலும் பாதிப்படையாதவாறு இந்த டேப்லெட் மிகப் பாதுகாப்புடனும் அதே நேரத்தில் உறுதியுடனும் வருகிறது. மேலும் குழந்தைகள் இந்த டேப்லெட் மூலம் தமது கல்வியை வளர்த்துக் கொள்ள முடியும்.-DINAVIDIYAL!