புதுதில்லி, ஏப்.5: தில்லியை நோக்கி ராணுவத்தின் 2 பிரிவுகள் முன்னேறி வந்ததாக வெளியான செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்த ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்திய ஜனநாயகத்தின் வேர் மிகவும் வலுவாக உள்ளது எனத் தெரிவித்தார்.
ராணுவப் புரட்சி ஏற்படுவதற்கு இந்தியா ஒன்றும் பாகிஸ்தான் அல்ல என்றார் அவர்.
தற்போது நடைபெற்றுவரும் சதித்திட்டம் நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என லாலு குறிப்பிட்டார்.
ராணுவத்தை அனைவரும் மதிக்கின்றனர். எதிரிகளுக்கு எதிராக நமது வீரர்கள் போரிட்டு வருகின்றனர். இந்திய ராணுவம் ஒன்றும் பாகிஸ்தான் ராணுவம் அல்ல. தற்போது நடைபெற்றுவரும் சதித்திட்டம் நாட்டுக்கு பெரும் ஆபத்து என லாலு தெரிவித்தார்.
-DINAVIDIYAL!