HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

கார்களில் பெட்ரோலுக்கு பதில் மாற்று எரிசக்தி : அப்துல்கலாம்

  சென்னை: தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் சங்கத்தின் 13வது மாநில மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. சங்க தலைவர் ரவீந்திரதாஸ் தலைமை வகித்தார். அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவஹர், சங்க தேசிய தலைவர் சின்ஹா, பொருளாளர் ஷபனா இந்திரஜித், பிரஸ் கவுன்சில் உறுப்பினர் அமர்நாத், அப்துல்கலாம் ஆலோசகர் டாக்டர் பொன்ராஜ், மயிலை வியாபாரிகள் சங்க தலைவர் மயிலை பெரியசாமி, டாக்டர் சிஎம்கே.ரெட்டி உள்பட பலர் பேசினர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: 

1941, 42, 43 ஆண்டுகளில் பள்ளி படிப்பு காலத்தில் ராமேஸ்வரத்தில் வீடுவீடாக பேப்பர் போடும் வேலை பார்த்தேன். காலையில் செய்தித்தாள்களை திறந்தவுடன் என் நாடு வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்ற ஒவ்வொரு இந்தியனுக்கும் வர வேண்டும் என்பது என் கனவு. அது நனவாக வேண்டும். எரிசக்தி துறையில் 2030க்குள் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 

வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலுக்கு பதில் எலெக்ட்ரிக், சூரிய மின்சக்தி, பயோ எரிபொருளை உபயோகப்படுத்த கார் உற்பத்தி நிறுவனங்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் நதிகளை இணைத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் உற்பத்தி அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
-DINAVIDIYAL!