HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 14 April 2012

விபத்தில் மூளைச்சாவு ஓய்வு பெற்ற அதிகாரியின் உடல் உறுப்புகள் தானம்

ஆரணி : விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த அதிகாரி உடல் உறுப்புகள் சென்னை தனியார் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி லயன்ஸ் சங்க மாவட்ட தலைவரும், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமானவர் எம்.மகாலிங்கம் (62). இவரது மனைவி கௌரி (57) லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர்.  இவர்களுக்கு ராஜன், சீனிவாசன், சரவணன் ஆகிய 3 மகன்கள். மகாலிங்கம் நேற்று முன்தினம் இரவு ஆரணி வ.உ.சி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு நினைவு இழந்தார்.

உடனடியாக அவரை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் விபத்தில் சிக்கிய மகாலிங்கத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது  உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டு, தேவைப்படுவோருக்கு பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

-DINAVIDIYAL!