HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

அடுத்த 'டார்கெட்' நீதான்... வீரபாண்டி ஆறுமுகத்துக்கு கொலை மிரட்டல்

சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்று ஆறுமுகம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் வீரபாண்டி ஆறுமுக் சார்பில் அவரது வக்கீல் ஒரு புகார் அளித்துள்ளார். அதில்,

11.04.2012 அன்று என்னுடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசிய மர்ம குரல், நேருவின் தம்பி ராமஜெயத்தைப் போல உன் கதையையும் முடித்து விடுவோம். அடுத்த குறி நீதான் என்று சொல்லிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து வீரபாண்டியார் கருத்து தெரிவிக்கையில், நான் வீட்டில் இருந்த போது மாலை 6.30 மணிக்கு எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. யார் பேசுகிறீர்கள் என்று கேட்டபோது எந்த பதிலும் கூறவில்லை. முதலில் பதில் கூற மறுத்து விட்டு பின்னர் பேசிய மர்ம நபர் அடுத்த டார்க்கெட் நீதான் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

இதுபற்றி நான் எனது வக்கீல் மூலம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து உள்ளேன். இந்த கொலை மிரட்டலுக்கு நான் அஞ்ச மாட்டேன்.
-DINAVIDIYAL!