சீனா: தற்போது மற்றவர்கள் கூறுவது போல் சீனா வலுவான நாடு இல்லை என்று அந்நாட்டின் வெளியுயவு அமைச்சர் லேயுசெங் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். சீனாவில் நடைபெற்ற உலக அளவிலான கல்வி கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர் சீனா பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் இன்னும் பல துறைகளில் வளர்ச்சி பெற வேண்டியுள்ளது. நம்மிடம் இன்னும் குறைகள் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் களைந்து நாம் கூடிய விரைவில் மற்ற நாடுகளை விட அதிகாரம் படைத்த சக்கி மிகுந்த நாடாக மாறிட வேண்டும் என்றும் அப்போது தான் சீனா உண்மையான வலுமிக்க நாடாக உருமாறும் என்றும் லேயுசெங் குறிப்பிட்டார்.-DINAVIDIYAL!