HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 22 April 2012

பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் ஐ.மு.கூ. அரசு உறுதியாக உள்ளது: பிரணாப் முகர்

வாஷிங்டன்: இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதியாக இருப்பதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்நடன் நகரில் பொருளாதார வல்லுநர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியானது 2012- 13ல் 7.6 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது 2013-`14ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கக் கூடும்.

பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இந்தியா போதுமான அக்கறை செலுத்தாமல் இருக்கிறது என்ற விமர்சனங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். எமது மத்திய அரசானது சில கடுமையான பொருளாதார கொள்கைகளை செயல்படுத்த வேண்டிய நேரம் இது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். 

முக்கியமாக ஓய்வூதியம், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் கடுமையான நிலைப்பாடுகளை நடப்பு ஆண்டில் நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம். இத்தகைய ஒருநிலையானது தவிர்க்க முடியாது. 2012-13ம் ஆண்டில் இதற்கான முன்னோட்டமான பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

ஓய்வூதியத்திட்ட ஒழுங்குமுறை சட்டம், காப்பீட்டு சட்டம், வங்கி சீரமைப்பு சட்டம் போன்றவற்றில் மாறுதல்களை கொண்டுவரும் தொடக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நடப்பு காலாண்டுத் தொடரில் இது சட்டமாக்கப்படும் என நம்புகிறேன். அடுத்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலாவது இச்சட்டங்கள் நிறைவேற்றப்படும்.

அதே நேரத்தில் இந்தியாவின் கூட்டணி அரசாங்கம் இத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்போது பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-DINAVIDIYAL!