லண்டன்:
போர்க்குற்றம் தொடர்பான
இங்கிலாந்து அதிகாரிகளின்
விசாரணையில் மாட்டிக்
கொள்ளாமல் தப்பும் வகையில்,
இலங்கை தூதரக
பாதுகாப்பு ஆலோசகராக
செயல்பட்டு வரும்
இலங்கை ராணுவ முன்னாள்
அதிகாரி பிரசன்னா சில்வா என்பவர்
லண்டனை விட்டு வெளியேற
தீர்மானித்துள்ளாராம். விரைவில்
லண்டனை விட்டு அவர் ஓடலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில்
ராணுவ மேஜராக இருந்தவர்
பிரசன்ன சில்வா. இவர்
மீது அப்பாவித் தமிழர்களைக்
கொன்றதாக தமிழர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர். இவர்
மீது போர்க்குற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று கோரி உலகத் தமிழர்
பேரவை இங்கிலாந்து அரசிடம்
மனு கொடுத்துள்ளது.
பல அப்பாவித் தமிழர்களின்
உயிரைப் பறித்த
போர்க்குற்றவாளியான
சில்வாவிடம் தீவிர
விசாரணை நடத்த வேண்டும்,
நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதையடுத்து அவரைப்
பிடித்து இங்கிலாந்து அரசு விசாரிக்கலாம்
என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இதனால் பீதியடைந்துள்ள
சில்வா இங்கிலாந்திலிருந்து தப்பி ஓடத்
திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சீக்கிரமே அவர்
மூட்டை முடிச்சுகளோடு இலங்கைக்கு ஓடுவார்
என்று கூறப்படுகிறது.